Blog Details

வளரிளம் பருவ காதல் (Teenage Love)

Oct 30, 2018 ahanacare

காதல் எல்லாக் காலகட்டத்திலும் முக்கியத்துவம் பெரும் ஒரு விஷயம், பதின் பருவத்தில் ஆண்-பெண் ஈர்ப்பு காதல் ஆகிறது . 13-19 வயதில் உடல் மற்றும் மன வளர்ச்சி அதிகமாக இருக்கும், தங்களின் தோற்றம், உடை, உடைமைகள், மீது அதீத அக்கறை மற்றும் கவனம் ஏற்படும். தங்கள் உடைகளை, வேண்டிய பொருளை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். Peer Influence, விருப்பு, வெறுப்பு, ரசனை, பேடன் போன்றவை நண்பர்கள் மூலமாகக் கற்றுக்கொள்கின்றனர்.
பதின்பருவத்தினர், தங்களின் உடல் மற்றும் மனவளர்ச்சி மாற்ங்களை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளவே விரும்புகின்றனர், அவர்களின் கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன.மாற்றுக் கருத்து மற்றும் அறிவுரை கூறும் பெற்றோர் எதிரிகளாக பார்க்கப்படுவதற்கு காரணம், அவர்களால் என்னைப் புரிந்து கொள்ள முடியாது என்ற கருத்து.
பதின் பருவத்தினர், தங்களின் உணர்வுசார்ந்த விஷயங்களை “பர்சனல்” என வரையறுக்கின்றனர், நண்பன் என்பவன் ரகசியங்களைத் தெரிந்தவன், புரிந்துகொண்டவன் ஆகிறான்.இந்த வயதில் எதிர்பாலினத்தவர் மீது ஏற்படும் ஈர்ப்பை “காதல்” என நினைக்கின்றனர்.
தன்னை எல்லாருமே பார்ப்பதாக உணரும் ஒரு இளைஞன்/இளைஞி அழகு, திறமை போன் Appearance சார்ந்த “காதல்” முதலில் உருவாகிறது. தனக்கென ஒரு தனி முக்கியத்துவம் கிடைக்கும், சிறு சிறு அசைவுகளும், ரசனைக்குரியதாக இருக்கும், ரகசியம்,பொய் சொல்வது போன்றவை ஒரு வித குறுகுறுப்பையும் கிளர்ச்சியையும் உண்டாக்கும். Butterfly feel என்பதை உணர்வது இந்தக் காலத்தில் தான்.உரையாடல் , சந்திப்புகள், பிறந்தநாள் வாழ்த்து எனக் காதல் வளர்கிறது, “நீதான் எனக்கு எல்லாம்” என இருவரும் உணரத் தொடங்குவர், தங்களைச் சுற்றியுள்ள விஷயங்களை Prioritize செய்யத் தொடங்குவர்.காதலிக்கத் தொடங்குவர். காதல் தெய்வீகமாகும்.
ஆராய்ச்சிகள் காதல் மூளையில் டோபமைன் அளவை அதிகரிக்கும் எனக் கூறுகிறது.
காலப்போக்கில், சண்டை, சச்சரவுகள், கருத்துவேறுபாடுகளால், டீன் ஏஜ் காதல், பிரச்சனைக்குரியதாக மாறும்.பதின்பருவத்தினரின் முடிவுகள் Emotional ஆக இருக்கும்.
பதின்பருவம், நல்லது அது கெட்டது எது அறியாப்பருவம், தோல்வி, அவமானம், துரோகம் அவர்களைத் தற்கொலை, Self harm போன்ற மோசமான முடிவுகளை எடுக்கத் தூண்டுகிறது. உயிரே பறந்த பட்டம் , சட்டென்று அறுந்து விழுவதைப் போன்ற உணர்வு,Decision-Making என்பது அறிவுசார்ந்து இருப்பதில்லை. அவர்களால் பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் தான்,மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். பெண்கள் ,மனவழுத்தம், படிப்பில் கவனமின்மை, தனிமை படுத்திக்கொள்ளுதல் ஆகியவை மூலம் காதல் முறிவைச் சந்திக்கின்றனர்.
ஆண்கள் போதை பழக்கம், Revenge porn எனச் செல்கின்றனர். இதில் Revenge porn இன்றைய காலகட்டத்தில் மோசமான ஒன்றாக இருப்பதால் தான், பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் புரிந்து கொண்டாலும், காதலுக்கு முதலில் No சொல்கின்றனர்.
எனவே காதலை முற்றிலுமாக மறுக்கவும் முடியாது , அது உணர்வுசார்ந்த அனுபவம். எல்லோரும் ஒரு கட்டத்தில் மற்றவர் மீது உணரும் நிர்மலமான அன்பு.
டீன் ஏஜ் காதலை எப்படிப் புரிந்து கொள்வது?
உளவியலாளர்கள், காதல், Self identity ஐ மேம்படுத்தும் எனக் கூறுகின்றனர், அனுபவங்கள் மூலம் கற்றுக்கொள்ளுதல் ஒரு மனிதனின் குணாதிசயத்தை நிர்ணயிக்கும். தான் யார் என்ற கேள்விக்கு அவர்கள் விடையறிகின்றனர்.
பிரித்தறியும் பக்குவம் வளர்கிறது, உணர்வுகளுக்கு மட்டுமே அளிக்கப்படும் முக்கியத்துவம் குறைத்து தீர்வு காணும் அடிப்படையில் அணுகுமுறையை வளர்த்துக்கொள்கின்றனர்.
Relationship என்பதைக் கையாளும் திறமையை மேம்படுத்துவதால் , எல்லாக் கோணங்களிலும் உள்ள குறைகளை அறிந்து நடந்து கொள்ள முயலுவர்.
இன்றைய டெக்னாலஜி சார்ந்த காதல், பெரும்பாலும் மொபைல் போன்களின் மூலமாக வளர்வதால், பயனுள்ள வகையில் அவற்றைப் பயன்படுத்த வழிகாட்டுதல் சிறப்பாக அமையும்.