Blog Details

வாழ்க்கைக் கல்வி கற்போம் வாருங்கள்!

Nov 24, 2018 ahanacare

உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய ஆசை, லட்சியம் என்னவாக இருக்கும்…?
நல்ல வேலை? நல்ல பொருளாதாரத்துடன் வாழ்க்கை? நினைத்த கனவை அடைவது? பெயரும் புகழும் நிறைந்த உச்சத்தை அடைவது?
அந்த ஆசையை லட்சியத்தை அடைந்தால் உங்களுக்கு என்னமாதிரியான உணர்வு இருக்கும்…..
பெருமகிழ்ச்சி???? பெரும் பூரிப்பு??? அளவில்லா ஆனந்தம்???
தற்போது மீண்டும் திரும்பி பாருங்கள்… நீங்கள் நினைத்த அனைத்தையும் அடைவதன் மூலமாக நீங்கள் அடைவது ஒன்று இருக்கிறது அல்லவா….அதுதான் மனநிறைவு…. மனமகிழ்வு….
மனிதனாகப் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் மனதுக்கு நிறைவான வாழ்க்கை வாழவேண்டும் என்ற எண்ணம் இருக்கும் ( எது மனநிறைவு என்பது வேறு கதை… அது மனிதர்க்கு மனிதர் மாறும்)
மனிதனாகப் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் மனதுக்கு நிறைவான வாழ்க்கை வாழவேண்டும் என்ற எண்ணம் இருக்கும் ( எது மனநிறைவு என்பது வேறு கதை… அது மனிதர்க்கு மனிதர் மாறும்)

கற்றலே வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான ஆதிமூலம்

ஒவ்வொரு நொடியும் நம் வாழ்வில் கற்றல் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. கற்றல் என்பது பள்ளியில், கல்லூரியில் சென்று மட்டும் கற்கும் ஏட்டுக் கல்வி கிடையாது. உண்மையில் பள்ளிக்கு வெளியில் நாம் நம்முடைய அன்றாட வாழ்வில் அனுபவங்களின் வழியாகக் கற்கும் கல்வி தான் அதிகம். அவைதான் நம்முடைய குணத்தை நற்பண்புகளைச் செதுக்கும் மிகப்பெரிய ஆயுதம் ஆகும்.
உளவியல் ரீதியாக மனிதனின் நுண்ணறிவுத்திறனை 3 வகைகளாகப் பிரிப்பர். அவை முறையே

  • COGNITIVE INTELLINGENCE (திறன்சார் அறிவு)
  • SOCIAL INTELLIGENCE (சமூக அறிவு)
  • EMOTIONAL INTELLIGENCE (உணர்வு சார் அறிவு)

COGNITIVE INTELLIGENCE என்று சொல்லக்கூடிய நுண்ணறிவாற்றல் ஒரு மனிதன் எத்தகைய அறிவாளி என்பதைத் தீர்மானிக்கும் மிக முக்கிய அம்சமாகும். அதாவது அறிவியல், கணிதம், கலை, தொழில்திறன், மொழிப்புலமை போன்ற திறங்களை குறிப்பதாகும்.
SOCIAL INTELLIGENCE மற்றும் EMOTIONAL INTELLIGENCE ஒரு மனிதன் எத்தகைய பண்பானவன் என்பதைக் குறிப்பதாகும். ஒருவருக்கு அறிவாற்றல் மிக நன்றாக இருந்தும் அவர் வாழ்வில் முன்னேறவில்லை என்றால் அவரின் சமூக அறிவும் உணர்வுசார் அறிவும் மேம்படவில்லை என்று அர்த்தம்.
ஆனால் இன்றைய சமுதாயம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. பெற்றோர்களின் சிந்தனை என்னவாக இருக்கிறது. இது போட்டி உலகம். இங்கு முன்னேற வேண்டும் என்றால் அதற்கு எப்படியாவது கல்வித்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு எப்படியாவது நகரின் மிகப்பெரிய பள்ளியில் சேர்த்துவிட வேண்டும். அங்குச் சேர்ந்து விட்டால் தம் பிள்ளைகளுக்கு எல்லாம் கிடைத்துவிடும் என்றாளவில் தான் அவர்களின் சிந்தனை இருக்கிறது. சமூகத்தின் அமைப்பையும், அதன் ஏற்ற இறக்கங்களையும் புரிந்துகொண்டு, சகி மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு தன்னுடைய உணர்களையும் கையாளத்தெரிந்த பக்குவப்பட்ட மனிதனாக ஒரு குழந்தையை வளர்ப்பதில் இருந்து விலகி போலியான போட்டி உலகம் ஒன்றை உருவாக்கி அதில் நம் பிள்ளைகளை பந்தய குதிரைகளாக ஓடவைத்துக் கொண்டிருக்கிறோம். மிக மோசமான மனித சமூகத்தை நாம் கட்டமைத்துக் கொண்டிருக்கிறோம். மனிதர்களுக்கிடையே பிணைப்பு குறைந்து, அன்பும் கருனையும் இரக்கக் குணமும் குறைந்து கொண்டே வருகிறது.
நினைத்துப்பாருங்கள்!!!
ஒருநாள் நாம் அனைவரும் நம் அனைருக்கும் போட்டியாளர்களாக எதிரிகளாக மாறிப்போனால் இந்த மனித உலகம் எவ்வாறு இயங்கும்.
நமக்கு தற்போதைய அத்தியாவசிய தேவை வாழ்க்கைக் கல்வி. ஏட்டுக்கல்வியையும் போட்டுக்கல்வியையும் தாண்டி வாழ்க்கைக் கல்வி கற்க வேண்டிய நேரமிது. சமூகக் கல்வியும் மனித உணர்வுகளைப் புரிந்து போற்றும் கல்வியும் தான் நமக்கு இன்று அத்தியாவசிய தேவை.
ஆங்கிலத்தில் இதை LIFE SKILLS என்று சொல்வார்கள். இதில் 10 முக்கிய குணாம்சங்கள் குறிப்பிடப்படுகிறது. அவையாவன
Life Skills

  • Self-awareness – தன்னிலை உணர்தல்
  • Empathy – பிறர் மீது அக்கறை கொள்ளுதல்
  • Interpersonal relationship – உறவுகளைப் பேணுதல்
  • Effective communication – தகவல் பரிமாற்றத் திறன்
  • Critical thinking – மாற்றுச் சிந்தனை
  • Creative thinking – புதிதாகச் சிந்தித்தல்
  • Decision making – முடிவெடுக்கும் திறன்
  • Problem Solving – பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன்
  • Coping with stress – இக்கட்டான சூழலை கையாளுதல்
  • Coping with emotion – எதிர்மறை உணர்வுகளைக் கையாளுதல்

இந்த 10 வகையான வாழ்க்கைப் பண்புகளும் ஒரு மனிதன் ஆரோக்கியமாக மகிழ்வாக வெற்றிகரமாக வாழ்வதற்கு மிக முக்கியம். அது மட்டுமல்ல இந்தப் பண்புகள் மனித சமூகம் கட்டமைப்புடன் ஒற்றுமையடன் வாழ்வதற்கும் மிக அவசியம்.
இரு குடும்பங்களுக்கிடையே போட்டி, இரு தெருக்களுக்கிடையே போட்டி, இரு ஊர்களுக்கு இடையே போட்டி, இரு மாவட்டங்களுக்கு இடையே போட்டி, இரு மாநிலங்கக்கிடையே போட்டி, இரு நாடுகளுக்கிடையே போட்டி என்று நாம் அனைவரும் ஒரு போலியான உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்ட ஒரு போட்டி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். போட்டிகள் அவசியம் தான். ஆனால் உண்மையில் நாம் அனைவரும் ஆரோக்கியமான நட்பான போட்டியா செய்கிறோம். நம்மை நோக்கி நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி?
எதிரி மனநிலை ஒழிந்து இயற்கையும் அறிவியலும் இணைந்த ஒற்றுமையான நவீன மனித சமூகம் உருவாக நாம் கற்க வேண்டியது முதலில் வாழ்க்கைக் கல்வி தான். மேலே குறிப்பிட்டுள்ள 10 பண்புகளும் கற்பதற்கு கடினமான ராக்கெட் தொழில் நுட்பம் ஒன்றும் கிடையாது. இவை நம் அன்றாட வாழ்வில் தினசரி அனுபவங்களிலிருந்து வருபவையே. ஆனால் பெரும்பாலானோர் இதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
வாழ்வதற்கு பணம் முக்கியம். ஆனால் பணத்தை விடப் பண்புகள் முக்கியம் என்று நாம் என்று உணர்கிறோமோ அன்று ஏட்டுக்கல்வியும் போட்டுக்கல்வியும் பின்னுக்குத் தள்ளப்பட்டு வாழ்க்கைக் கல்வி முன்னுக்கு வரும். ஒட்டு மொத்த மனித சமூகமும் முன்னுக்கு வரும்.