Blog Details

மனநலம் – ஆரோக்கிய வாழ்வின் அடிப்படை

Nov 3, 2019 ahanacare

உலக சுகாதார மையத்தின் கூற்றுப்படி ஆரோக்கியம் என்பது உடல் மனநலன் மற்றும் நோயற்ற நிலையே ஆகும்.எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்ற பழமொழிகேற்ப்ப ஆரோக்கியமான வாழ்வு என்பது மனநலத்தில் இருந்தே துவங்குகிறது. ஒருவர் மனநலத்துடன்  இருந்தால் அதுவே உடல்நலன், நோயற்ற நிலையை உத்திரவாதபடுத்தும்எனவே ஒவ்வொருவரும் முதலில் பேண வேண்டியது மனநல ஆரோக்கியமே ஆகும். குழந்தை பருவம் முதல் முதுமைப் பருவம் வரை மனதளவில் நாம் பல மாறுதல்களுக்கு உள்ளாகிறோம்.சில சூழ்நிலை சார்ந்த சிக்கல்கள், சங்கடங்கள் நம்முடைய சொந்த விருப்பு வெறுப்புகளும் நம்முடைய மன ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும். 
மனநலம் என்பது மகிழ்ச்சியாக வாழ்வது என்ற ஒற்றை கோட்பாட்டில் முடிவதில்லை. மகிழ்ச்சியான வாழ்வு தான் நம் ஒவ்வொருவரின் ஆசையாக இருந்தாலும் எப்பொழுதும் அது சாத்தியமில்லை. 
மன நல ஆரோக்கியம் பேண,

  1. நம்மை பற்றி  நேற்மறையான சிந்தனை கொள்ள வேண்டும்.நமது நிறைகுறைகளை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். 
  2. அனைவரிடமும் ஆரோக்கியமான, நேற்மறையான, கலகலப்பான உறவு கொள்ள வேண்டும்.
  3. தினசரி வேலைகளை முழு மன ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும்.
  4. சுய நெறிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். 

நீங்கள் மனநலத்துடன் இருக்கறீர்களா என்பதை கீழ்காணும் கேள்விகள் மூலம் அறிந்து கொள்ளுங்கள். 

  1. நிறைவான உறக்கம்(சுமார் 8 மணி நேர நல்லுறக்கம் ) இல்லையா?
  2. 3 வேளை பசித்து உண்ண முடியவில்லையா?
  3. மனதளவில் ஏதேனும் தொடர் கவலை, பயம், பதட்டம் உள்ளதா?
  4. தீடீர் கோபம், தீடீர் அழுகை, எப்பொழுதும் எரிச்சலான மனநிலையில் உள்ளீர்களா?
  5. மது போதை பழக்கம் உள்ளதா?

மேற்காணும் கேள்விகளில் மூன்றுக்கும் மேல் “ஆம்” என்ற பதில் வந்தால் நீங்கள் ஒரு மனநல ஆலோசகரைச் சந்திப்பது நல்லது.